Pages

Thursday, March 1, 2012

கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரம்

பிப்ரவரி 25அன்று நாகை மாவட்டத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பேரணி யில் சுமார் 2 லட்சம் கட்சித் தொண்டர்கள் குவிந்ததையும், அலை அலையாக, வங்கக் கடல்போல் ஆர்ப்பரித்துப் பேரணியில் சென்ற தையும் அங்கு சென்ற யாவரும் கண்டனர். ஆனால், இதனுடன் சேர்த்து இன்னொரு நிகழ்வும் அமைதியாக, நெகிழ்ச்சியுடன் நடந்தது.பேரணிக்காக நாகையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங் கள் நாகைக்குள் நேரடியாக நுழையவில்லை. அவை சற்றே திசைமாறி கீழ்வேளூர் சென்று அங்கிருந்து கீழ வெண்மணியை நோக்கித் திரும்பின. வாகனங்கள் எளிதாகச் செல்ல முடியாத அளவு போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டுவிட்டது. அப்படி, அப்படியே அவற்றை விட்டு விட்டு, தொண்டர்கள் சாரி சாரியாக வெண்மணியை நோக்கிச் சென்று கொண் டிருந்தனர்.முதியோர், இளைஞர்கள், பாலகர்கள் என்று அனைவரும் அங்கு நடந்தனர். ஒரு மாற்றுத் திறனாளியான இளைஞரை, மற்ற தோழர்கள் மாறி மாறி முதுகில் சுமந்து கொண்டு சென்றனர். அனைவரின் திசை யும் ஒன்றே - அது கீழ வெண்மணி தியாகி கள் நினைவிடம்.“இதற்காகத்தானே நீங்கள் செங்கொடி யேந்திப் போராடி இன்னுயிர் ஈந்தீர்கள்?” என்று கூறியவாறே தொண்டர்கள்நெல்லைக் காணிக்கையாகச் சொரிந்த போது நெஞ்சம் நெகிழ்ந்து போனது. அருகில் சிஐடியு சார்பில் எழுப்பப்படும் வெண்மணி நினைவாலயம் கம்பீரமாக எழுந்து வருவதையும் பார்த்தோம்.அந்த வெண்மணித் தீயில் தப்பிய ஒரு தோழர் அங்கு அமர்ந்திருந்தார். அவர் அங்கு அனைவரின் அன்பு மழையில் நனைந்து உருகிக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த சம்பவத்தைப் பற்றிப் பலர் கேட்டறிந்து கொண்டிருந்தனர்.பெரியவர்கள், சிறியவர்களுக்கு வெண் மணி சம்பவத்தை விவரித்து அந்த தியாகத் தின் மதிப்பை உணர்த்திக் கொண்டிருந்ததை யும் காண முடிந்தது.ஒரு ஊருக்குச் செல்லும்போது, பொது மக்கள் அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவது, இந்திய, தமிழகக் கலாச்சாரம். ஆனால், வேளாங்கண்ணிக்கோ, நாகூருக்கோ செல்லாமல் கீழ வெண்மணியை நோக்கிச் சென்றதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் கலாச் சாரம், வர்க்கப் போரில் உயிர் ஈந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அங்கு நிரூபணமாகிக் கொண்டிருந்தது.

0 comments:

Post a Comment

இனிதே துவங்கி உள்ளது. வாழ்த்துக்கள்